வணக்கம் அன்பு நண்பர்களே, நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர் மீண்டுமொரு சந்திப்பு. மனதிற்கு ஆறுதலாக என் நண்பர்களின் சந்திப்பு. நான் தங்கள் குழுமத்தினருடன் பழகியமை மிகவும் குறைவாக இருப்பினும், தங்கள் 2005 வருட உயர் கல்விக்காலத்தில் தங்களுடன் கற்றவன் என்னும் வகையிலேயே இதில் இணைந்திருக்கின்றேன். நன்றி இவ்வாறு ஒரு சந்திப்பு. மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரைகளும், கிண்டல்களும், கேலிகளும் என்றும் மீண்டும் என்னும் ஏக்கத்துடன்; அலைபாயும் மனத்துடன் அந்நிய நாட்டிலே அநாதையாக.... எதை எப்படிப் பேசினாலும், மனதிலே வைக்காத நம் நண்பன் என்னும் பாசம் மீண்டும் கிள்ளி இழுக்கின்றது. வருவோம் சந்திப்போம், நாள் வெகு தொலைவிலில்லை; காணும் நாளில் கைகொட்டிச் சிரிப்போம் இதைப்பற்றி... தொடரட்டும் தங்களின் நண்பர் வட்டாரம். என் நினைவுகளை பதிவேன் சிறிது கால அவக்காசந் தேவை. மன்னிக்கவும். மறந்தே போய்விட்டேன் மலேசியாவில் நானுள்ளேன். நீங்கள் சிலரிருக்கும் இடம் மட்டும் எனக்கு தெரிந்தாலும் காலம் நம்மை நம்மிடத்தில் சேர்க்கும் காத்திருப்போம் இன்னமும் சிறிது காலம் தான். இலங்கையிலுள்ள நண்பர்களே தங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பாதுகாப்பாக இருங்கள். வருவேன் அடுத்தவருட இறுதிக்குள் முடிந்தால் சந்திக்கின்றேன். கூடப்படித்த பலரை இழந்துவிட்டோம் இனியும் இழக்க விருப்பமில்லை. தங்கள் ஆருயிர் நண்பர்களின் இறுதி மூச்சுவரை என்னிடம் உள்ளத்திலே பதிந்துள்ளது. இரைமீட்போம் ஒருநாள்.
நன்றி
தங்கள் நண்பர்களில் ஒருவன்,
பா.கோகிலநாத்.
*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Thursday, June 19, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment