*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Thursday, January 19, 2012

எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்


எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்


எமது ஈழத்துக் கலைஞர்களின் பிரமாண்டமான சினிமா தயாரிப்பு தயார்

பிரித்தானியாவில் இருந்து எமது ஈழதுது இழைஞர்களால் தயாரிக்கப்பட்டு பொலிவூட் சினிமாவைவிட எந்த தரத்திலும் குறையாது மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்ட ஓளிப்படப் பாடல் வெளியாகியுள்ளது, 

இப்பாடலை பிரித்தானியாவில் வைத்து, மன்னர் கால முறைப்படி, உயர் தொழிலநுட்ப்ப கருவிகளால், பல தெரிவு செய்யப்பட்ட இடங்களில் படமாக்கி யுள்ளனர், இப்பாடலை பார்க்கும் போது எமது கலைஞர்களும் உலகத்தரத்துக்கு இணையான படைபுக்களை தரமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கின்றது, 

இப்பாடலை நீங்களும் பார்த்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்



 
பாடலை பார்க்க : LINK


நன்றி


Thursday, March 24, 2011


Monday, December 20, 2010

சிப் மென்பொருள் (SIP Softwares)

நாம் அனைவரும் வருடத்திற்கு இரண்டு முறையாவது நமது கணணியை பார்மெட் செய்து இருப்போம் அவ்வாறு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் நாம் கணணியில் அடிப்படை மென்பொருட்களான யாகூ மெசஞ்சர், ஒபன் ஆபிஸ், கேம் ப்ளேயர், ஸ்கைப், அடோப் ப்ளாஸ் ப்ளேயர், விண்ரேர் போன்ற மென்பொருட்களை தரவிறக்கி பிறகு தனித்தனியாக நிறுவ வேண்டும்.
இவை அனைத்தும் மட்டுமல்லாது இன்னும் பிற சுதந்திர கட்டற்ற மென்பொருட்கள் இணைந்து ஒரே மென்பொருளாக நிறுவ ஒரு மென்பொருள் உள்ளது. அதுதான் சுருக்காமாக் சிப் என்று அழைக்கப்படும் ஸ்மார்டர் இன்ஸ்டாலர் பேக். நான் மேற்கூறிய மென்பொருள் அல்லாது நிறைய மென்பொருட்கள் உள்ளது. இது அனைவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


மென்பொருள் தரவிறக்க

பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு

கையில் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர் போல தற்போதைய பிளாஷ் டிரைவ் உருவாகி வருகிறது. சென்ற இதழ்களில் பிளாஷ் டிரைவில் வைத்து எந்த கம்ப்யூட்டரிலும் இயக்கக் கூடிய சில தொகுப்புகள் குறித்த தகவல்கள் தரப்பட்டன. அப்படியானால் இந்த பிளாஷ் டிரைவ்களிலும் ஆண்டி வைரஸ் தொகுப்புகளைப் பதிந்து வைத்து அதில் வைரஸ்கள் நுழைந்துவிடாமல் பாதுகாக்கலாமே என்று பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி இருக்கின்றனர். இந்த எண்ணத்துடன் இணையத்தை தேடியபோது சில பயனுள்ள தகவல்கள் கிடைத்தன.

பிளாஷ் டிரைவ்களை நாம் பல்வேறு கம்ப்யூட்டர்களில் இணைத்துப் பயன் படுத்துகிறோம். பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்று தெரியாது. அவற்றை அவ்வப்போது செக் செய்திடவும் முடியாது. அவை தரும் பாதுகாப்பிற்கு எந்த உத்தரவாதத்தையும் பெற முடியாது. அப்படியே அந்த கம்ப்யூட்டரில் ஆண்டி வைரஸ் புரோகிராம் இருந்தாலும் அது அப்டேட் செய்யப்பட்டதா எனவும் நாம் உறுதி செய்து கொள்ள முடியாது. எனவே பாதுகாப்பற்ற ஒரு கம்ப்யூட்டரில், பிளாஷ் டிரைவை இணைத்துப் பயன்படுத்துகையில் நம் பிளாஷ் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்களை இழக்கும் நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம். இந்நிலையில் தான் நம் பிளாஷ் டிரைவினையும், வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதுள்ளது. அதற்கான ஒரு புரோகிராம் குறித்து இங்கு காணலாம். AntiVir personal Edition என்னும் புரோகிராம் இவ்வகையில் சிறந்த புரோகிராமாக நமக்குக் கிடைக்கிறது. இதனை http://www. freeav.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இந்த புரோகிராமினை பிளாஷ் டிரைவில் பதிந்து அதிலிருந்தே இயக்கலாம். இதனால் வைரஸால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. இந்த புரோகிராமினையும் தேவைப்படும்போது அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதை நம் பிளாஷ் டிரைவில் பதிந்து கொள்வதும் எளிதாக உள்ளது.


AdAware SE Personal Edition 1.06 : இந்த புரோகிராம் நம் பிளாஷ் டிரைவிற்குள் எந்த ஸ்பை வேர் புரோகிராமும் நுழையவிடாமல் பாதுகாக்கிறது. இவ்வகையில் இதன் திறன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.


இந்த புரோகிரமினை இன்ஸ்டால் செய்திடுகையில் நேரடியாக உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் முதலில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். அதன் பின் Start, Programs, எனச் சென்று அங்கு கிடைக்கும் AdAware பைலினை உங்கள் பிளாஷ் டிரைவில் காப்பி செய்து விடுங்கள். பிளாஷ் டிரைவ் பாதுகாப்பில் இருக்கும் படி செட் செய்துவிடுங்கள். ஒரு சிலர் இவ்வளவு வேலை இருக்கிறதா? பேசாமல் பிளாஷ் டிரைவினை நம்பிக்கையற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இணைக்க வேண்டாம் என்று எண்ணுவார்கள். இந்தக் காலத்தில் நம்பிக்கை உள்ள மற்றும் நம்பிக்கை இல்லாத கம்ப்யூட்டர் என்று எதுவுமே இல்லை. எதில் வேண்டு மானாலும் மோசமான வைரஸ் இருக்கலாம். ஒரு முறை தலைமைச் செயலகத்தில் ஆணையர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் இருந்து வீட்டில் பைல் பார்ப்பதற்காக பைல் ஒன்றினைக் காப்பி செய்திட வேண்டி இருந்தது. தலையில் சத்தியம் செய்யாத குறையாக வைரஸ் எதுவுமில்லை என்று சொன்னதால் பைலைக் காப்பி செய்து என் வீட்டிற்குக் கொண்டுவந்தேன். அதிக அதிகாரமிக்க அதிகாரியின் கம்ப்யூட்டரில் வைரஸ் எங்கிருக்கப் போகிறது என்று அசட்டுத் தைரியம். உயர் அதிகாரி சொல்லும் போது கேட்கத்தானே வேண்டும் என்கிற மரியாதை. பைலைக் காப்பி செய்து என் கம்ப்யூட்டருக்குமாற்றினேன். அடுத்த முறை பூட் செய்திடுகையில் பைல்கள் எல்லாம் தடுமாறின; தலைகீழாக மாறின; ஒவ்வொரு பைலும் ஒரு இ.எக்ஸ்.இ. பைலாக மாறின. அவ்வளவு தான் அன்று இரவு சிவராத்திரி. என்ன செய்தும் வைரஸ் நகர மறுத்தது. இறுதியில் வேறு வழியின்றி ஹார்ட் டிஸ்க்கில் சி டிரைவினை ரீ பார்மட் செய்து பைல்களை மீண்டும் காப்பி செய்து உறங்க அதிகாலை மூன்று மணி ஆயிற்று. இத்தனைக்கும் என் கம்ப்யூட்டரில் நல்ல திறன் கொண்ட ஆண்டி வைரஸ் உள்ளது. எனவே பாதுகாப்பு வளையங்களை மட்டும் அதிகப்படுத்தினால் போதாது. எச்சரிக்கையுடனும் கம்ப்யூட்டர்களைக் கையாள வேண்டுM

Tuesday, July 27, 2010

gdgedteg

setertgfuyfnjgfjmgjnffghfhnjtgbnggh

Wednesday, July 7, 2010

மரண அறிவித்தல்.

Sunday, May 16, 2010

கண்ணீர் அஞ்சலி.


நண்பன் சி.மயுரனின் அன்புத்தந்தை சிவப்பிரகாசம் அவர்களின் பிரிவால் வாடும் மயுரனுக்கும் குடும்பத்தினர்க்கும் எமது குழாமின் கண்ணீர் காணிக்கைகளைச்சமர்ப்பிக்கிறோம்.