*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, December 31, 2008

Happy New Year






Tuesday, December 30, 2008

உங்கள் பதிவுகளை இடுவது எப்படி?

நீங்கள் எங்கள் தளத்திற்கு முதலில் செல்லுங்கள்.
அதில் இணைந்தவர்கள் பட்டியலிலுள்ள உங்கள் பெயரின் மீது கிளிக் செய்தால்

உங்களுடைய சுயகுறிப்புப்பக்கத்திற்கு(Profile) செல்வீர்கள்.

அதன்பின் உங்கள் சுயகுறிப்புப்பக்கத்தின் மேலே இருக்கும் B blogger இன் மேல் கிளிக்செய்தால் jhc2005 பக்கத்திற்கு செல்வீர்கள்.

அதில் jhc2005 இன் கீழ் இருக்கும் Newpost என்பதன் மேல் கிளிக் செய்தால் புதியபதிவுகளை இடும் பக்கத்திற்கு செல்வீர்கள்.

நீங்கள் இடவேண்டிய பதிவினை இட்டபின் "Publish post" என்ற பொத்தானை கிளிக் செய்யவும். உங்கள் பதிவு jhc2005 இல் பிரசுரிக்கப்பட்டுவிடும்.

Monday, December 29, 2008

சுட்டியின் பிறந்தநாள் party

Friday, December 26, 2008

சுகந்தனுக்கு பிறந்த நாளுங்க...

அருளப்பரின் சின்னப்பர் ”கள்ளச்சுட்டி” எனப்படும் சுகந்தன்(கரடி) தனது 22 வது பிறந்த தினத்தை இன்று (26-12-2008) வெகு அடக்கமாக கொண்டாடுகின்றார்(??? இதுவரை கொண்டாடியதேயில்லை).

இவரைப்பற்றிய சுபாவக்குறிப்பு -
இவர் இதுவரை ஆண் நண்பர்களிற்கு எதுவித party யும் கொடுத்ததில்லை.ஆனால், அழைப்பிதழ் கொடுக்காத party களில் கலந்து சிறப்பிப்பார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது இவரின் பிறந்த தினம் யாருக்கும் தெரிந்ததும் இல்லை, இவர் அதைப்பற்றி கூறியதும் இல்லை.
தற்பொழுது இவரின் பிறந்த தினம் பலரிற்கும் தற்பொழுது தெரிந்து விட்டதால் party வைக்கும் படி பலர் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இவர் கடந்த ஒரு வாரகாலமாக அறையைவிட்டு வெளியில் வருவதும் இல்லை, தொலைபேசியை switch off இலும் வைத்துள்ளார்.
இவர் தனது சிங்கள நண்பிக்கு(???) party தருவதாக கூறியுள்ளார்.

அத்துடன், பிறந்த நாள் வாழ்த்தினை JHC2005 வலைப்பூ நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

Wednesday, December 24, 2008

இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.

வலையுலக நண்பர்கள்,JHC2005நண்பர்கள், அனைவருக்கும் JHC2005 சார்பில் நத்தார் நல்வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்

Thursday, December 18, 2008

சுகந்தனுக்கு பிறந்தநாள் வருகுது....

எமது கல்லூரி நண்பன் செல்வன்.சுகந்தன் தனது 22 வது பிறந்த தினத்தை இம்மாதம் 26 ம் திகதி கொண்டாடவுள்ளார்.


Tuesday, December 16, 2008

நானும் இந்தியாவைத்தான் கலக்கிறன்!



Thursday, December 11, 2008

இந்தியாவை கலக்கும் பண்டிதர்.

Saturday, November 29, 2008

முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்..!

வீதியால் பயணிக்கும்வேளைகளில் பல மரதன் ஓட்டங்களை கடந்தகாலங்களில் பார்த்திருந்தாலும் அவ்வாறு ஒரு மரதனில் நானும் ஓடியது சுவாரசியமானது। அதை விட எனது நண்பர் பிரதீபனின் மரதன் ஓட்ட ஒத்திகை அதை விட சுவாரசியமானது। நாட்டின் யுத்தசூழ்நிலையால் எனது பாடசாலை வாழ்வில் இரண்டு மூன்று இல்ல விளையாட்டுப்போட்டிகளே நடைபெற்றிருந்தன। அவ்வருடம் இல்லவிளையாட்டப்போட்டியை முன்னிட்டு 05 கிலோமீற்றர் மரதன் ஓட்டம் இடம்பெறும் என்ற அறிவித்தலால் மரதன் ஓடும் வயதை எட்டியிருந்த பலரும் மகிழ்ச்சியும் திகிலும் அடைந்தனர்। பாடசாலைக்கு அண்மையிலிருந்தோர் போட்டிக்கு பலநாட்கள் முன்பே விடியற்காலையில் ஓடி பயிற்சி பெறத்தொடங்கியிருந்தனர். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கங்களும் 20 நிமிடங்களுக்குள் ஓடிமுடிப்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மாணவ தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான புள்ளியிடல் திட்டத்தில் விளையாட்டு தொடர்பான திறமைக்கும் புள்ளி இருந்ததால் நானும் நண்பர் பிரதீபனும் அதில் பங்குபற்றுவதாக தீர்மானித்திருந்தோம்। விடியற்காலையில் ஓடிப்பழகுபவர்களால் கவலையடைந்திருந்த பிரதீபன், போட்டியன்று மட்டும் ஓடினால் தசைபிடிப்பு ஏற்படும் எனவே ஊரிலாவது ஓடிப்பழகுவோம் என்று அபிப்பிராயப்பட்டார்.

பாடசாலையில் உடற்பயிற்சி பாடவேளைகளில் உதைபந்தாட்டம் என்ற பெயரில் பந்திற்குப்பின்னால் கண்டபடி ஓடுவதாலும் தினமும் சைக்கிளிலேயே பாடசாலை செல்வதாலும் ஓட்டப்பயிற்சியை நான் பெரிதுபடுத்தவில்லை. அதேவேளை அதிகாலையில் சந்தைக்கு பொருட்கள் கொண்டு போகும் சனங்கள் வாகனங்கள் மத்தியில் வேடிக்கை பொருளாக ஓடுவதும் எனக்கு கூச்சமான ஒன்றாயிருந்தது. என்றாலும் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க ஓடி ஒத்திகை பார்ப்பது என்று தீர்மானித்துக்கொண்டோம். 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவந்து பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு பிரதான வீதியின் சந்திக்கு போவதாக ஏற்பாடு.


அடுத்தநாளும் வந்தது. அதிகாலை 05 மணிக்கு வருவதாக சொன்ன ஆள் 06 மணியாகியும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது விஷயம். ஐந்து மணிக்கே எழும்பி ஓட வெளிக்கிட்ட நண்பரை சற்றும் வழமைக்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாக கருதிய அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.

சைக்கிளுடன் பையனும் நண்பரும் விழுந்தவேகத்தில் பால் கொள்கலனின் மூடியும் வெடித்து திறந்ததால் அவ்வளவுபாலும் வீதியில்..!! பால்காரப்பையன் அழுதுகொண்டே நண்பரை பிலுபிலு வெனப்பிடித்துக்கொண்டானாம் - வீட்டில் கொன்றே போடுவார்கள் மரியாதையாகக் காசைத்தரச்சொல்லி. நண்பரும் மிகவும் உடல் + மனம் நொந்து போனார். விடியக்காலமை வேறு..!


வேறு வழியில்லாமல் பையனையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குப்போன பிரதீபன் மொத்தப் பாலுக்கான காசையும் பையனின் மருந்துச்செலவுகளுக்குமான காசையும் சேர்த்துக்கொடுத்தனுப்பி வைத்தாராம். பின்னர் விடயத்தைக் கேட்டு நானும் நண்பரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனாலும் நண்பருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாலும் இதையொரு துர்ச்சகுனமாகக் கருதியதாலும் நண்பர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தான் மரதன் ஓட்ட நிகழ்வின்போது தனது செஞ்சிலுவை கழகத்தின் சார்பில் வீதியொழுங்கு கடமையில் ஈடுபடவிருப்பதாகவும் சொன்னார்.


எனவே நான் தனியாளாக போட்டியில் இறங்கவேண்டியிருந்தது. பதக்கங்கள் எல்லாம் எனக்கு அப்பாற்பட்டது என்று தெரிந்திருந்தாலும் 20 நிமிடத்திற்குள் ஓடி சான்றிதழாவது பெற்றுவிடவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. குறித்த நாளும் வந்தது. சைக்கிளில் ஓடிப்போனால் களைத்து விடுவேன் என்று நண்பரே தனது சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றார். என்னை மைதானத்தில் விட்டுவிட்டு அவர் வீதி ஒழுங்கு கடமைக்கு சென்றுவிட்டார்.


மைதானம் போட்டியாளர்களால் ஜே ஜே என்றிருந்தது. பதினேழு மற்றும் பத்தொன்பது வயதுகளின் கீழான இரு போட்டிகளாக நடக்க இருந்தது. பெயர் பதிந்து இலக்கங்களை வாங்கி பனியனின் முன்னும் பின்னும் குற்றிக்கொண்டு தரப்பட்ட குளுக்கோஸை உண்டுவிட்டு திகிலோடு காத்திருந்தேன்.

சரியாக காலை ஆறுமணிக்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்கள். 10 நிமிடமே இருந்தது. எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது.


எனது பிரிவில் ஓடுபவர்கள் நூறுபேராவது இருப்பார்கள் போலிருந்தது. மணி அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டில் நிற்கவைத்து (கொஞ்சம் கும்பலாகத்தான்) ஆயத்தமணி அடிக்கப்பட்டதும் கும்பலாக கிளம்பினோம். நெடிய ஓட்டம் என்பதால் யாரும் விர் என்று பாயவில்லை.

கொஞ்ச தூரம் ஓடியதுமே கும்பல் கலைந்து அவரவர் வேகத்திற்கு ஏற்றபடி குழுக்களாகவும் தனியன்களாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆட்களை முந்தவேண்டும் என்று வளைந்தும் நெளிந்தும் ஓடவேண்டாம். அப்படி ஓடினால் ஓட்டதூரம் கூடும் களைத்து போவீர்கள் இடைவெளி கிடைக்கும்வரை சீரான வேகத்தில் ஓடி பின்னர் முந்தவேண்டும் என்று நிரம்ப உபதேசங்கள் வழங்கியிருந்தார்கள்.


ஒலிபெருக்கியில் அறிவித்தபடி ஒரு வாகனம் முன்னால் போக வழிநெடுகிலும் மக்கள் நிறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள் பாதை ஒழுங்கில் ஈடுபட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பாளர்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வழமையாக மிகவும் சனசந்தடி மிக்க வீதிகளால் பெனியனுடன் ஓடியது வித்தியாசமான அனுபவம்.


ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.

வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.


ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.

நடக்கத்தொடங்கியிருந்தவர்கள் வீதியில் நின்ற பார்வையாளர்களின் கிண்டலுக்கு ஆளானதால் நான் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தேன். நாக்கு வெளியில் வந்தது. வெளிச்சுவாசத்தின் போது சத்தமும் சேர்ந்தே வந்தது !. ஆனாலும் வீதிக்கடமையிலிருந்த பிரதீபனைக்காணும் வரையாவது ஓடுவோம் என்ற சங்கற்பத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன்.


இருபது நிமிட எல்லை இருந்ததால் கையிலிருந்த நிறுத்தற்கடிகாரத்தை பார்த்தபோது, ஆரம்ப அவசரத்தில் என்னத்தை அமத்தினனோ தெரியாது அதில் எல்லாம் எட்டு எட்டாகத்தெரிந்தது. வெறுத்துப்போய் வீதியில் கடமையிலிருந்த செஞ்சிலுவை சீருடைகளில் பிரதீபனை தேடினேன்.
கே.கே.எஸ் வீதியை ஊடறுத்து பழக்கமில்லாத வீதியொன்றிற்குள் இறங்கியபோது பிரதீபனை கண்டேன்.

கடமையில் இருந்ததால் முகத்தை 'உம்' மென்று வைத்திருந்தாலும் வியர்வையும் தண்ணீரும் தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் வழிய என்கோலத்தைக் கண்டு ஆளுக்கு சிரிப்பு வந்தது என்பது தெரிந்தது. பலர் முன்னுக்கு போய்விட்டார்கள் என்று சைகை காட்டினார். இது என்னை உசுப்பேத்திவிட.. நானும் 'வ்வோவ்..' என்ற சத்தத்துடன் ஆட்களை கடக்க ஆரம்பித்தேன். கால்கள் கெஞ்சின. சப்பாத்தின் டொக் டொக்குகளிற்குள் கால் அதிர்ந்தது.


மீண்டும் கே।கே।எஸ் வீதியிலேறி பாடசாலையின் மேற்குப்புற கட்டடங்களை தூரத்தில் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டது। அதே போல பின்னால் வந்தவர்களிற்கும் கரைபுரண்டிருக்கவேணும்॥ என்னைக்கடந்து ஓடினார்கள்। மைதானத்தை அடைந்து மைதானத்திற்குள் ஒரு சுற்றும் ஓடிய பின்பே முடியுமிடம் வரும்। கடைசிக்கட்டம் ஆனதால் நானும் தலைதெறிக்க ஓடினேன்। ஆனாலும் என்ன ஏமாற்றம்..! பாடசாலையின் பிரதான வாசலை அடைந்த நேரம் முடிவுமணி ஒலி நாராசமாய் காதில் விழுந்தது।


குறிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால் மைதானவாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்। நீண்ட ஓட்டம் முடிவுற்றபோது உடம்பு முழுவதும் வெம்மையாக உணர்ந்தேன். நாடித்துடிப்பு உடம்பின் சகல பாகங்களிலும் கேட்டது. உடனடியாகவே 19 வயதின் கீழான போட்டி மறுமுனையில் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு பலர் உண்மையாகவோ அல்லது கிண்டலாகவோ கைகுலுக்கினார்கள். ஓடிய அனைவருக்கும் சுடச்சுட கோப்பி வழங்கப்பட்டது.

குறித்த நேரத்திற்குள் நானூறு அல்லது ஐநூறு மீட்டர் தூரத்தினால் நான் அந்த மரதனை கோட்டைவிட்டேன். எனினும் இரண்டே மீற்றர் தூரத்தினால் கோட்டை விட்டவர்களை நினைத்து என்னை திருப்திப்படுத்திக்கொண்டேன். வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!


சுட்டது : http://koculan.blogspot.com/2008/06/blog-post.html

Friday, October 31, 2008

தமிழில் ரைப் செய்வது.

வணக்கம் நண்பர்களே.தமிழில் ரைப் செய்வது கடினமாக உள்ளது.எவ்வாறு என்று கூறமுடியுமா?

Sunday, October 26, 2008

JHC2005 நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

Thursday, October 16, 2008

இலண்டனில் வாசன்.....




Sunday, October 12, 2008

வணக்கம் வந்துட்டேன்!!!!!!!!!!!

வணக்கம் நண்பர்களே!!!!
நான் தான் உங்கள் நண்பன் கோபிராஜ். ஞாபகம் இருக்கிறதா??? நானும் உங்களுடன் சேர்ந்து எமது பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

இப்படிக்கு,
உங்களில் ஒருவன்,
கோபிராஜ்

Saturday, October 11, 2008

பண்டிதரின் ஜனன விழா

myspace comments


பண்டிதர் சிவகணேசன் தனது 22வது ஜனன தினத்தை 14ம் திகதி ஐப்பசி மாதம் இந்தியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.இந்தியாவாழ் இந்துவின் மைந்தர்களே நீங்களும் கலந்து சிறப்பித்து இத்தளத்திற்கு புகைப்படங்களை அனுப்பி உங்கள் சேவையை வழங்கவும்.
பண்டிதருக்கு எமது குழாமின் பிறந்ததின வாழ்த்துக்கள்!!!!!!!
குறிப்பு: இந்தியா சென்ற பண்டிதர் திருப்பதியில் ஏதோ வேண்டுதலுக்காய் மொட்டை போட்டதாக கேள்வி???
அவரது வேண்டுதல் நிறைவேற நாமும் நல்லைக்கந்தனிடம் பிரார்த்தப்போம்!!!!

Wednesday, October 1, 2008

சைக்கிள் ஜக்ஸனின் இலண்டன் பயணம்.

நடிகர் ஆகவேண்டும் என்ற நினைப்பைகைவிட்டு உயர்கல்வியை
தொடர்வதற்காக
28/09/2008 அன்று இலண்டன் பயணமானார்.அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எமது JHC2005 சார்பில் வாழ்த்துகின்றோம்,மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
(பாட்டிவைத்ததே அதிசயம்.....)
பார்ட்டியில் எடுத்த புகைப்படம்.

Tuesday, September 30, 2008

இலண்டன் பயணமாகும் எமது நண்பன்.

நண்பன் கோகுலவாசன் உயர்கல்வியை தொடர்வதற்காக 01/10/2008 அன்று இலண்டன் பயணமாகிறார். அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள். மற்றும் நண்பர் கோகுலவாசனின் பார்ட்டியில் கலந்து கொண்ட எங்கள் நண்பர்களின் புகைப்படங்கள் சில.......

.

Monday, September 22, 2008

கனடாவை கலக்கும் இலங்கை வாலிபன்...

படத்தில் இருக்கும் எமது நண்பர் பெயர் மயூரன். இது பலபேருக்கு தெரியாது. ஏனெனில் இவரை பலர் செல்லமாக மார்க்கண்டு என இவரது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பதுண்டு.....இவ்வாறு பழக்க தோசத்தில் எமது நண்பர் ஒருவர் இவரது வீட்டில் போய் மார்க்கண்டு எனக் கூப்பிட்டு.................. என்ன நடந்ததென்பது அனைவருக்கும் தெரிந்த பழைய கதை. இப்போது கனடாவில் குடியேறிய இவர் தன்னை இலங்கையன் எனக்காட்டிக்கொள்வதில்லையாம். யாராவது கேட்டால் i am from canada என சொல்லி திரிவதாகஅறியக்கிடைத்தது. அது மட்டுமல்லாமல் மார்க்கண்டு மயூரன் என்ற தனது பெயரை மார்க் மயூரன் என மாற்றியுள்ளார்இது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்ட போது
இயல்பிலேயே தான் வெள்ளையாகவும், அழகாகவும் இருப்பதால் அவ்வாறு செய்வதாக கூறினார்.இந்த மாற்றத்தால் தனக்கு பல வசதிகள் கிடைப்பதாகவும் பல நண்பிகள் இலகுவாக கிடைக்க கூடியதாக இருக்கிறதுஎன்று கூறினார்.
எப்படி இருப்பினும் தாய்நாட்டை மறக்க, மறுக்க,முடியுமா மயூரா???

Saturday, September 13, 2008

வன்மையாக கண்டிக்கிறேன்

அம்மிக்கு இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்த்துக்களைத் தெரிவித்த போதும் எனக்கு இன்னும் மதியபோசனம் அனுப்பி வைக்கபடவில்லை.இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.எனினும் அம்மிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.இவரைப்பற்றி வேறு சில தகவல்கள் சில தினங்களில்.......புகைப்படத்துடன்

Friday, September 12, 2008

பாசம் மறவாத என் அன்புத் தோழர்களே!!!!!!!!

அன்புத் தோழர்களே!!!!!
நான் தான் உங்களில் ஒருவன் வே.சிவகணேசன்.ஞாபகம் இருக்கிறதா?
இல்லை மறந்துவிட்டிர்களா?மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்பு நான் உங்ளோடுஇணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
கல்லூரியில் நாம் சிறகடித்து திரிந்த பசுமையானநினைவுகளை மறக்கமுடியுமா? பழகிக் கழித்த தோழர்களை மறக்கமுடியுமா??
மீண்டும்அந்த பசுமையான நினைவுகளைமீட்க நானும் உங்களோடு இணைகின்றேன்....

என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!!!
பேசக்கூடமறந்தாலும்
வாசம் மாறிப்போகாது!!!
வருசம் பல கழிந்தாலும்
வரவேற்பு குறையாது!!!
வசதி வாய்ப்பு வந்தாலும்
"டேய் மச்சான்" மாறாது!!!

உங்கள் நண்பன்
வே.சிவகணேசன்

அம்மிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

அம்மி என அழைக்கப்படும்(ஆனால் இவர் தோற்றமோ அம்மிக்கும் குழவிக்குமிடையில் அகப்பட்டவர் போன்று)அமலன் தனது 22வது ஜனன தினத்தை பம்பலப்பிட்டியிலுள்ள MC Donald இல் வெகுவிமரிசையாக மதியம் சரியாக இலங்கை நேரப்படி 12.00 மணிக்கு மதிய போசனவிருந்துபசாரத்துடன் ஆரம்பிக்கிறார்.அவரது வேண்டுகோளுற்கிணங்க அழைப்பிதழ் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவரும் இவ்வழைப்பிதழை தனிப்பட்ட அழைப்பிதழாகக்கருதி வந்து அவரை வாழ்த்தி அவரால் வழங்கப்படும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் அழைக்கப்படுகிறீர்கள்.

பிற்குறிப்பு: விழாவில் கலந்து சிறப்பிக்க விரும்புவோர் 13.09.2008 அன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்துக்களைத்தெரிவிக்கவேண்டும்.இல்லையேல் மதியபோசனம் தரப்படமாட்டாது.தடங்களுக்கு வருந்துகிறோம்.

தொடர்புகளுக்கு: மே. அம்மி

Tuesday, September 9, 2008

பா.சபேசனுக்கு(சப்பி) பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்(30.08.2008)அன்று.

கொஞ்சம் ஞாபக மறதி அதனாலதான் இந்த பிந்திய
வாழ்த்துக்கள்....... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
பா.சபேசன் தனது 22 ஆவது பிறந்தநாளை (30.08.2008) அன்று வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் வெகு விமர்சையாக கொண்டாடினார்.எமது சபேசனை நம் நண்பர்கள் சார்பாகவும் JHC 2005 சார்பாகவும் வாழ்த்துகின்றோம்,
மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....

Wednesday, August 20, 2008

இவர் யார்?

இந்த பதிவு பல நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவே எழுதப்படுகிறது.எவ்வாறு எனின்,
எமது jhc2005 மின்னஞ்சல் வரவுப்பெட்டியானது தினமும் பல நூற்றுக்கணக்கான
மின்னஞ்சல்களினால் நிரம்புகிறது.அவற்றுள் பெரும்பாலானவை ”இந்தியா போவதாக கூறிவிட்டு
வெள்ளைக்கார நாடு சென்ற அந்த நம்பிக்கை ------ யார்?” என்பதாகும் எனவே நாங்கள்
நண்பர்களை திருப்தி படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவரை பற்றி சுருங்கக் கூறின் இவர் ஒரு அண்ட ஆகாச மகா வெடிப்புழுகர்.
இவர் கூறுவதில் 20% மாத்திரமே உண்மை என்பது அனுபவப்பட்டவர்கள் கண்ட உண்மை.
இவர் யார் என ஊகிக்க முடிந்தால் குறிப்பிடவும்.
(தொடரும்...)

Saturday, August 16, 2008

பிரசாந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நண்பன் பிரசாந்தன் இன்று லண்டனில்(16/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்குவேம்படி
பிள்ளையார் அருள் புரிவாராக {வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் கொண்டாடுகிறார்.)
குறிப்பு:இவருக்கு வேம்படி விநாயகர் மீது அபார பக்தி

Friday, August 8, 2008

மரத்தின் மேல் mகுoரnங்kகாe?y?????

வானர வர்க்கங்களிற்கு மத்தியில் நிற்கும் நண்பர் ஜெயந்தன்.இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள் அங்கு ஒரு மோதிரம் தெரியும்.இது சட்ட பூர்வமானதா அல்லது சட்ட பூர்வமற்றதா என எமக்கு இதுவரை தெரியவில்லை.தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்.இவர் பெண் (- -) நண்பர்களுடன்??? மட்டும் பழகுவதால் எமக்கு விபரங்கள் கிடைப்பதில் சற்று தாமதம்.
(இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள்)

பிந்திகிடைத்த புகைப்படம்

Thursday, August 7, 2008

கதை இல்லாமல் படம் எடுக்கலாமா...?

பெயர்இல்லாமல் கமெண்ட்ஸ் போடும் நண்பருக்கு...................

Wednesday, August 6, 2008

இன்று கோகுலவாசனுக்கு பிறந்த நாளுங்கோ......

நண்பன் கோகுலவாசன் இன்று கொழும்பில் (06/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!”

பிரசாந்தனுக்கு(M.P) பிறந்தநாள் வருகுது....

எமது கல்லூரி நண்பன் செல்வன். நந்தகுமார் பிரசாந்தன் தனது 22 வது பிறந்த தினத்தை இம்மாதம் 16 ம் திகதி கொண்டாடவுள்ளார். இவரை JHC2005 வலைப்பூ பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.


வாழ்க்கை வரலாறு -

1986-08-16 ல் காரைதீவில் பிறந்து வளர்ந்த இவர் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியாவில் வசித்துப்பின், தனது கல்விக்காக யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையில் நிரந்தர வதிவிடத்தை அமைத்துக்கொண்டார்.
சிறு பராயம் முதல் கிரிக்கட்டில் அதிக அக்கறை கொண்ட இவர் தனது தகப்பனாரின் கடையில் இருந்த டெனிஸ் போலின் கனிசமான அளவை ஆட்டையப் போட்டமை இவர் கிரிக்கட் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி Edna cricket stickers களை சேகரித்து ஒரு துடுப்பாட்ட மட்டையை பரிசாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் வளர்ந்கத மண்ணாக யாழ் இந்து மைதானத்தைக் குறிப்பிடலாம்.
இவர் தற்பொழுது பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்கின்றார்.

Tuesday, August 5, 2008

hai

hai hai hai h r u? i also joined with u. i am very happy to joined it o.k

புகைப்படத் தொகுப்பு





"உங்கள்ளிடம் இருகும் புகைப்படத் தொகுப்புகளையும் அனுப்பி பகிர்ந்து கொள்ளுங்கள்"

Thursday, July 31, 2008

விழுதுகள்" இசை வெளியீட்டிலிருந்து

இந்து அன்னையின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட பாடல் தொகுப்பு இது
JHC

கொழும்பில் இப்பொது

மே.அமலன்



யாழ்,சன்னதி,தொண்டமண் ஆற்றில் குளித்து விட்டு நிக்கும் மே.அமலன் என்பவர் இப்பொலுது ஒரு உருப்படியான விசயத்த செய்யிராரம் யாழ்ப்பானத்தில் இருக்கும் போது இவர் all rounder நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியும் இவருடய படங்கள் மிகத் தெளிவாக சில தினங்களில்... மேலதிக செய்திகளும் விரைவில்.....

Wednesday, July 30, 2008

"சைக்கிள் ஜக்ஸன்“


இவரிற்கு தான் ஒரு நடிகர் ஆக வேண்டும் என்ற நினைப்பு உருவானது.இந்நிலையில் இவர் எமது நண்பர் நடிகர் வினோஜ்யுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றும்
அது பலன் அற்றுப் போகவே தனது மனத்திருப்திக்காக தனது புகைப்படத்தில் இருந்து
தலையை வேறாக்கி பிரபல தென் இந்திய கதாநாயகர்களின் படத்தில் தனது தலையை கணினி
மூலம் பொருத்தி (Photoshop) அதனை அச்சுப்பிரதி எடுத்து தனது அறையில்ஒட்டியிருப்பது மட்டுமின்றி
”ஃfacebook” நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளார்.இவரின் இவ் மன நோய்க்கான காரணம் என்ன?
இவற்றை விட விசேட செய்தி என்னவெனில்......
இவரிற்கு ”Photoshop” எனும் மென் பொருளை கையால்வதில் பரீட்சையம் குறைவு.
இதன் காரணமாக இவ்வாறான தலை வெட்டி மாற்றும் சித்து விளையாட்டுகளைதனது நண்பர் ஒருவர்
மூலம் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.இவரின் இவ்வாறான மட்டமான பல்வேறுபட்ட
நிகழ்வுகள் தொடர்ந்தும் வர இருப்பதால் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்...

+