*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
நண்பன் கோகுலவாசன் உயர்கல்வியை தொடர்வதற்காக 01/10/
2008 அன்று இலண்டன் பயணமாகிறார்.
அவர் மென்மேலும் பல சிறப்புக்களை அடைய எமது JHC2005
சார்பில் வாழ்த்துகள்.
மற்றும் நண்பர் கோகுலவாசனின் பார்ட்டியில் கலந்து கொண்ட எங்கள் நண்பர்களின் புகைப்படங்கள் சில.......

படத்தில் இருக்கும் எமது நண்பர் பெயர் மயூரன். இது பலபேருக்கு தெரியாது. ஏனெனில் இவரை பலர் செல்லமாக மார்க்கண்டு என இவரது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பதுண்டு.....இவ்வாறு பழக்க தோசத்தில் எமது நண்பர் ஒருவர் இவரது வீட்டில் போய் மார்க்கண்டு எனக் கூப்பிட்டு.................. என்ன நடந்ததென்பது அனைவருக்கும் தெரிந்த பழைய கதை. இப்போது கனடாவில் குடியேறிய இவர் தன்னை இலங்கையன் எனக்காட்டிக்கொள்வதில்லையாம். யாராவது கேட்டால்
i am from canada என சொல்லி திரிவதாகஅறியக்கிடைத்தது. அது மட்டுமல்லாமல் மார்க்கண்டு மயூரன் என்ற தனது பெயரை
மார்க் மயூரன் என மாற்றியுள்ளார்இது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்ட போது
இயல்பிலேயே தான் வெள்ளையாகவும், அழகாகவும் இருப்பதால் அவ்வாறு செய்வதாக கூறினார்.இந்த மாற்றத்தால் தனக்கு பல வசதிகள் கிடைப்பதாகவும் பல நண்பிகள் இலகுவாக கிடைக்க கூடியதாக இருக்கிறதுஎன்று கூறினார்.
எப்படி இருப்பினும் தாய்நாட்டை மறக்க, மறுக்க,முடியுமா மயூரா???
அம்மிக்கு இன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்த்துக்களைத் தெரிவித்த போதும் எனக்கு இன்னும் மதியபோசனம் அனுப்பி வைக்கபடவில்லை.இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.எனினும் அம்மிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
இவரைப்பற்றி வேறு சில தகவல்கள் சில தினங்களில்.......புகைப்படத்துடன்
அன்புத் தோழர்களே!!!!!
நான் தான் உங்களில் ஒருவன் வே.சிவகணேசன்.ஞாபகம் இருக்கிறதா?
இல்லை மறந்துவிட்டிர்களா?மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்பு நான் உங்ளோடுஇணைவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.
கல்லூரியில் நாம் சிறகடித்து திரிந்த பசுமையானநினைவுகளை மறக்கமுடியுமா? பழகிக் கழித்த தோழர்களை மறக்கமுடியுமா??
மீண்டும்அந்த பசுமையான நினைவுகளைமீட்க நானும் உங்களோடு இணைகின்றேன்....
என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!!!
பேசக்கூடமறந்தாலும்
வாசம் மாறிப்போகாது!!!
வருசம் பல கழிந்தாலும்
வரவேற்பு குறையாது!!!
வசதி வாய்ப்பு வந்தாலும்
"டேய் மச்சான்" மாறாது!!!
உங்கள் நண்பன்
வே.சிவகணேசன்

அம்மி என அழைக்கப்படும்(ஆனால் இவர் தோற்றமோ அம்மிக்கும் குழவிக்குமிடையில் அகப்பட்டவர் போன்று)அமலன் தனது 22வது ஜனன தினத்தை பம்பலப்பிட்டியிலுள்ள MC Donald இல் வெகுவிமரிசையாக மதியம் சரியாக இலங்கை நேரப்படி 12.00 மணிக்கு மதிய போசனவிருந்துபசாரத்துடன் ஆரம்பிக்கிறார்.அவரது வேண்டுகோளுற்கிணங்க அழைப்பிதழ் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவரும் இவ்வழைப்பிதழை தனிப்பட்ட அழைப்பிதழாகக்கருதி வந்து அவரை வாழ்த்தி அவரால் வழங்கப்படும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் அழைக்கப்படுகிறீர்கள்.
பிற்குறிப்பு: விழாவில் கலந்து சிறப்பிக்க விரும்புவோர் 13.09.2008 அன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்துக்களைத்தெரிவிக்கவேண்டும்.இல்லையேல் மதியபோசனம் தரப்படமாட்டாது.தடங்களுக்கு வருந்துகிறோம்.
தொடர்புகளுக்கு: மே. அம்மி

கொஞ்சம் ஞாபக மறதி அதனாலதான் இந்த பிந்திய
வாழ்த்துக்கள்....... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
பா.சபேசன் தனது 22 ஆவது பிறந்தநாளை (30.08.2008) அன்று வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் வெகு விமர்சையாக கொண்டாடினார்.எமது சபேசனை நம் நண்பர்கள் சார்பாகவும் JHC 2005 சார்பாகவும் வாழ்த்துகின்றோம்,
மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
