*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Wednesday, July 23, 2008

விடுமுறையில்

மலேசியாவிலிருந்து விடுமுறையில் இலங்கை வந்து வெள்ளவத்தையில் ரஜீவன் தலைமையில் கலக்கும் தீனா........
யாழ்ப்பாணத்தில் தொலைத்த தனது உடைமையை தேடுகிறாராம். வெள்ளவத்தை நண்பர்களே உங்களால் முடிந்தால் விடுமுறை முடிவதற்குள் கண்டுபிடிக்க உதவுங்கள்.


Friday, July 18, 2008

கலக்கிறாரு

எங்கட நண்பர் ஒருவர் லண்டனில கலக்கிறாராம்? எங்கட லண்டன் செய்தியாளர் ஒருவர் புகைப்படத்தோட எமக்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில ஒரு கூட்டமாகச்சுற்றின இவர் இலண்டனிலும் இவரது வட்டங்களுடன் திரிந்த இவர் இதில் மட்டும் எப்படி தனியாக...?கறுத்தக்கண்ணாடியுடன் தனக்கே கைவந்த தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்வி...? இதைவிட லண்டனில் பல கோணங்களிலெடுத்த புகைப்படங்களும் மேலதிக செய்திகளும் விரைவில்.....

Friday, July 11, 2008

கொழும்பில ஒரு கதை அடிபடுது???

தனது படிப்பு விசயமாக கிட்டடியில கோகுலவாசன் என்பவர் ஒருத்தருக்கும் சொல்லாமல் இந்தியாவிக்கு போயிட்டு வந்தவர். அங்க ”சன்மியூசிக்கில” போய் ”சன்மியூசிக்” நேயர்களோட கதைத்துள்ளார். இப்ப என்னன்டா இவருக்கு பக்கத்தில நிக்கிற பிள்ளைக்கு இவர் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு அன்பு தொல்லை கொடுப்பதாக கொழும்பில ஒரு கதை அடிபடுது???



இந்தியாவில போய் படிக்கப்போறன் எண்டு கதைவிட்டு சிலபேரை ஏமாத்திட்டு வெள்ளைக்காரன்ர(USA) நாட்டுக்கு போனவரின்ட கதை விரைவில்..........

Tuesday, June 24, 2008

searching

hi guys,
let me know how r u doing?
i need Krisanth (13 C) contact details, If anyone knows please let me know.
thank you guys.
your loving friend,
Jay.

Sunday, June 22, 2008

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில்

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் கலக்கின நண்பன் சாந்தன் இன்று
லண்டனில் சைக்கிளில மட்டுமல்ல குதிரையிலும் கலக்கிறாரெண்டு தற்போது தகவல் கிடைத்துள்ளது.லண்டன் வாழ் நண்பர்களே தயை கூர்ந்து மேலதிக செய்திகளை உடன் வழங்கவும்.உங்கள் சேவையை நாடும் jhc2005

Friday, June 20, 2008

குதிரை ஓடுகிற பிரசாந்தன்

பிரசாந்தன் என்பவருங்கோ யாழ்ப்பாணத்தில முந்தி சைக்கிள் ஒன்டில தொங்கி தொங்கி திரிஞ்சவர். இப்ப என்னன்டா குதிரையெல்லோ ஓடுறார். குதிரை ஓடுரண்டா நீங்க நினைக்கிற மாதிரி தப்பான விசயமில்ல. அவர் பொய்க் குதிரையில (Merry-go-round) ஏறி சுத்துராருங்கோ???
இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாராம்.....


அத்தோட இன்னொருத்தரும் குதிரை ஓடுறதா கேள்வி!!!
அது விரைவில்.....

Thursday, June 19, 2008

நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர்

வணக்கம் அன்பு நண்பர்களே, நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர் மீண்டுமொரு சந்திப்பு. மனதிற்கு ஆறுதலாக என் நண்பர்களின் சந்திப்பு. நான் தங்கள் குழுமத்தினருடன் பழகியமை மிகவும் குறைவாக இருப்பினும், தங்கள் 2005 வருட உயர் கல்விக்காலத்தில் தங்களுடன் கற்றவன் என்னும் வகையிலேயே இதில் இணைந்திருக்கின்றேன். நன்றி இவ்வாறு ஒரு சந்திப்பு. மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரைகளும், கிண்டல்களும், கேலிகளும் என்றும் மீண்டும் என்னும் ஏக்கத்துடன்; அலைபாயும் மனத்துடன் அந்நிய நாட்டிலே அநாதையாக.... எதை எப்படிப் பேசினாலும், மனதிலே வைக்காத நம் நண்பன் என்னும் பாசம் மீண்டும் கிள்ளி இழுக்கின்றது. வருவோம் சந்திப்போம், நாள் வெகு தொலைவிலில்லை; காணும் நாளில் கைகொட்டிச் சிரிப்போம் இதைப்பற்றி... தொடரட்டும் தங்களின் நண்பர் வட்டாரம். என் நினைவுகளை பதிவேன் சிறிது கால அவக்காசந் தேவை. மன்னிக்கவும். மறந்தே போய்விட்டேன் மலேசியாவில் நானுள்ளேன். நீங்கள் சிலரிருக்கும் இடம் மட்டும் எனக்கு தெரிந்தாலும் காலம் நம்மை நம்மிடத்தில் சேர்க்கும் காத்திருப்போம் இன்னமும் சிறிது காலம் தான். இலங்கையிலுள்ள நண்பர்களே தங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பாதுகாப்பாக இருங்கள். வருவேன் அடுத்தவருட இறுதிக்குள் முடிந்தால் சந்திக்கின்றேன். கூடப்படித்த பலரை இழந்துவிட்டோம் இனியும் இழக்க விருப்பமில்லை. தங்கள் ஆருயிர் நண்பர்களின் இறுதி மூச்சுவரை என்னிடம் உள்ளத்திலே பதிந்துள்ளது. இரைமீட்போம் ஒருநாள்.

நன்றி

தங்கள் நண்பர்களில் ஒருவன்,
பா.கோகிலநாத்.