*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்து. Show all posts

Wednesday, May 27, 2009

23வது வெடி விழா.............

யாழ் இந்து அன்னையின் மடியில் வெடி நாயகனாய் தவழ்ந்த உலங்கு வானூர்தி முதல் விண்கலம் வரை தனக்கே உரிய பாணியில் பல கதைகளைக் கட்டவிழ்த்து விட்ட ஜயந்தன் தனது 23வது பிறந்ததினத்தை 27ஆந்திகதி வைகாசி மாதம் 2009 அன்று அமெரிக்காவில் பூர்த்தி செய்வதையொட்டி எமது குழாம் சார்பில் பிறந்ததின வாழ்த்தை தெரிவிக்கின்றோம்.
அத்துடன் அவரது கற்பனைகளை நிஜமாக்கும் நாசா எனும் குறிக்கோளை நோக்கி வெற்றி நடை போடுவதையிட்டு இந்து அன்னையின் மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றோம்!

Thursday, April 9, 2009

சுஜந்தனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்



வெற்றிகரமாக தனது 23-ஆவது அகவையை கடந்திருக்கும் ஆருயிர் நண்பர் சுஜந்தனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



பி.கு: அவரது ஜனன தினத்தை நேரில் சென்று வாழ்த்துபவர்களுக்கு ஒரு இறாத்தல் வெதுப்பி, ஒரு குதப்பி (கேக்), மற்றும் ஒரு கதலிப்பழம் கொடுத்து உபசரிக்கப்படும் என பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


தகவல்: கிஷோ

Wednesday, February 4, 2009

வைரவருக்கு பிறந்ததின வாழ்த்து




இன்று தனது 23வது பிறந்ததினத்தை வெகுவிமரிசையாகக்கொண்டாடும் வைரவருக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

பிற்குறிப்பு: அவரது தாழ்மையான வேண்டுகோளுக்கிணங்க அவரால் வடிவமைக்கப்பட்ட இவ்வாழ்த்துமடல் பிரசுரிக்கப்படுகிறது.

Friday, December 26, 2008

சுகந்தனுக்கு பிறந்த நாளுங்க...

அருளப்பரின் சின்னப்பர் ”கள்ளச்சுட்டி” எனப்படும் சுகந்தன்(கரடி) தனது 22 வது பிறந்த தினத்தை இன்று (26-12-2008) வெகு அடக்கமாக கொண்டாடுகின்றார்(??? இதுவரை கொண்டாடியதேயில்லை).

இவரைப்பற்றிய சுபாவக்குறிப்பு -
இவர் இதுவரை ஆண் நண்பர்களிற்கு எதுவித party யும் கொடுத்ததில்லை.ஆனால், அழைப்பிதழ் கொடுக்காத party களில் கலந்து சிறப்பிப்பார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்த பொழுது இவரின் பிறந்த தினம் யாருக்கும் தெரிந்ததும் இல்லை, இவர் அதைப்பற்றி கூறியதும் இல்லை.
தற்பொழுது இவரின் பிறந்த தினம் பலரிற்கும் தற்பொழுது தெரிந்து விட்டதால் party வைக்கும் படி பலர் வற்புறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இவர் கடந்த ஒரு வாரகாலமாக அறையைவிட்டு வெளியில் வருவதும் இல்லை, தொலைபேசியை switch off இலும் வைத்துள்ளார்.
இவர் தனது சிங்கள நண்பிக்கு(???) party தருவதாக கூறியுள்ளார்.

அத்துடன், பிறந்த நாள் வாழ்த்தினை JHC2005 வலைப்பூ நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

Saturday, October 11, 2008

பண்டிதரின் ஜனன விழா

myspace comments


பண்டிதர் சிவகணேசன் தனது 22வது ஜனன தினத்தை 14ம் திகதி ஐப்பசி மாதம் இந்தியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.இந்தியாவாழ் இந்துவின் மைந்தர்களே நீங்களும் கலந்து சிறப்பித்து இத்தளத்திற்கு புகைப்படங்களை அனுப்பி உங்கள் சேவையை வழங்கவும்.
பண்டிதருக்கு எமது குழாமின் பிறந்ததின வாழ்த்துக்கள்!!!!!!!
குறிப்பு: இந்தியா சென்ற பண்டிதர் திருப்பதியில் ஏதோ வேண்டுதலுக்காய் மொட்டை போட்டதாக கேள்வி???
அவரது வேண்டுதல் நிறைவேற நாமும் நல்லைக்கந்தனிடம் பிரார்த்தப்போம்!!!!

Friday, September 12, 2008

அம்மிக்கு பிறந்தநாள் வாழ்த்து!

அம்மி என அழைக்கப்படும்(ஆனால் இவர் தோற்றமோ அம்மிக்கும் குழவிக்குமிடையில் அகப்பட்டவர் போன்று)அமலன் தனது 22வது ஜனன தினத்தை பம்பலப்பிட்டியிலுள்ள MC Donald இல் வெகுவிமரிசையாக மதியம் சரியாக இலங்கை நேரப்படி 12.00 மணிக்கு மதிய போசனவிருந்துபசாரத்துடன் ஆரம்பிக்கிறார்.அவரது வேண்டுகோளுற்கிணங்க அழைப்பிதழ் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.நண்பர்கள் தெரிந்தவர்கள் அனைவரும் இவ்வழைப்பிதழை தனிப்பட்ட அழைப்பிதழாகக்கருதி வந்து அவரை வாழ்த்தி அவரால் வழங்கப்படும் மதியபோசனத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தாழ்மையுடன் அழைக்கப்படுகிறீர்கள்.

பிற்குறிப்பு: விழாவில் கலந்து சிறப்பிக்க விரும்புவோர் 13.09.2008 அன்று இலங்கை நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு முன்னதாக வாழ்துக்களைத்தெரிவிக்கவேண்டும்.இல்லையேல் மதியபோசனம் தரப்படமாட்டாது.தடங்களுக்கு வருந்துகிறோம்.

தொடர்புகளுக்கு: மே. அம்மி

Tuesday, September 9, 2008

பா.சபேசனுக்கு(சப்பி) பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்(30.08.2008)அன்று.

கொஞ்சம் ஞாபக மறதி அதனாலதான் இந்த பிந்திய
வாழ்த்துக்கள்....... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....
பா.சபேசன் தனது 22 ஆவது பிறந்தநாளை (30.08.2008) அன்று வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் வெகு விமர்சையாக கொண்டாடினார்.எமது சபேசனை நம் நண்பர்கள் சார்பாகவும் JHC 2005 சார்பாகவும் வாழ்த்துகின்றோம்,
மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....

Saturday, August 16, 2008

பிரசாந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நண்பன் பிரசாந்தன் இன்று லண்டனில்(16/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்குவேம்படி
பிள்ளையார் அருள் புரிவாராக {வழமைபோல நண்பர்களுக்கு பார்ட்டி வைக்காமல் கொண்டாடுகிறார்.)
குறிப்பு:இவருக்கு வேம்படி விநாயகர் மீது அபார பக்தி

Wednesday, August 6, 2008

இன்று கோகுலவாசனுக்கு பிறந்த நாளுங்கோ......

நண்பன் கோகுலவாசன் இன்று கொழும்பில் (06/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்கு நல்லூர் கந்தன் அருள் புரிவாராக....
“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!”

பிரசாந்தனுக்கு(M.P) பிறந்தநாள் வருகுது....

எமது கல்லூரி நண்பன் செல்வன். நந்தகுமார் பிரசாந்தன் தனது 22 வது பிறந்த தினத்தை இம்மாதம் 16 ம் திகதி கொண்டாடவுள்ளார். இவரை JHC2005 வலைப்பூ பதிவு நண்பர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.


வாழ்க்கை வரலாறு -

1986-08-16 ல் காரைதீவில் பிறந்து வளர்ந்த இவர் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக வவுனியாவில் வசித்துப்பின், தனது கல்விக்காக யாழ்ப்பாணம் அன்னசத்திர ஒழுங்கையில் நிரந்தர வதிவிடத்தை அமைத்துக்கொண்டார்.
சிறு பராயம் முதல் கிரிக்கட்டில் அதிக அக்கறை கொண்ட இவர் தனது தகப்பனாரின் கடையில் இருந்த டெனிஸ் போலின் கனிசமான அளவை ஆட்டையப் போட்டமை இவர் கிரிக்கட் மீது கொண்டிருந்த காதலை வெளிப்படுத்தியது.
அதுமட்டுமின்றி Edna cricket stickers களை சேகரித்து ஒரு துடுப்பாட்ட மட்டையை பரிசாக பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் வளர்ந்கத மண்ணாக யாழ் இந்து மைதானத்தைக் குறிப்பிடலாம்.
இவர் தற்பொழுது பிரித்தானியாவில் மேற்படிப்பை தொடர்கின்றார்.

Thursday, June 12, 2008

மலேசியாவில் கலக்கிறாரு

யாழ் மண்ணின் தீக்கோழி என செல்லமாக அழைக்கப்படும் தீனதக் ஷன் தனது 21 வருட பூர்த்தியை 11.06.2008 அன்று மலேசியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.வாருங்கோ நாங்களும் போய் மொய் எழுதிட்டு வருவோம்.அத்தோட எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.மலேசியா வாழ் நண்பர்களே மறந்திடாம இரவு விருந்துபசாரத்துல கலந்துகொள்ளுங்கோ!
நண்பரோட புகைப்படம் வரத்தாமதமாகியதால பிரசுரிக்காததற்கு மனம் வருந்துகிறோம்.வந்தவுடன் பிரசுரிக்கப்படும்.உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்


நண்பன் தீனதக்ஷன் தனது 22 பிறந்தநாளை மலேசியாவில் 11.06.2008 வெகுவிமரிசையாகக்கொண்டாடினார் . அவருக்கு எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.அத்துடன் தனது convocation ஜ{next day} முடித்துள்ளார் அவருக்கு எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் . மலேசியாவில் girl friend உடன் கலக்கிறார் எண்டு ஒரு வதந்தி.............


your friend shanthan

Friday, June 6, 2008

வாழ்த்துவோம் வாங்கோ..!

நண்பன் நிரஞ்சன் உதித்து 22 வருடங்கள் பூர்த்தியாவதை ஒட்டி 07.06.2008 அன்று வெகுவிமரிசையாகக்கொண்டாடவுள்ளார்.அதற்கு உங்களுடைய வாழ்த்துக்களை வேண்டி நிற்கிறார்.அவர் இப்ப கண்ணாடி எல்லாம் போட்டு மொரட்டுவை வெள்ளவத்தையெல்லாம் கலக்கிறார் பாருங்கோ.

எழுதியது : JHC2005