*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.
எமது கல்லூரி நண்பன் செல்வன்.சுகந்தன் தனது 22 வது பிறந்த தினத்தை இம்மாதம் 26 ம் திகதி கொண்டாடவுள்ளார்.


படத்தில் இருக்கும் எமது நண்பர் பெயர் மயூரன். இது பலபேருக்கு தெரியாது. ஏனெனில் இவரை பலர் செல்லமாக மார்க்கண்டு என இவரது தந்தையின் பெயர் சொல்லி அழைப்பதுண்டு.....இவ்வாறு பழக்க தோசத்தில் எமது நண்பர் ஒருவர் இவரது வீட்டில் போய் மார்க்கண்டு எனக் கூப்பிட்டு.................. என்ன நடந்ததென்பது அனைவருக்கும் தெரிந்த பழைய கதை. இப்போது கனடாவில் குடியேறிய இவர் தன்னை இலங்கையன் எனக்காட்டிக்கொள்வதில்லையாம். யாராவது கேட்டால்
i am from canada என சொல்லி திரிவதாகஅறியக்கிடைத்தது. அது மட்டுமல்லாமல் மார்க்கண்டு மயூரன் என்ற தனது பெயரை
மார்க் மயூரன் என மாற்றியுள்ளார்இது குறித்து நான் அவரிடம் விளக்கம் கேட்ட போது
இயல்பிலேயே தான் வெள்ளையாகவும், அழகாகவும் இருப்பதால் அவ்வாறு செய்வதாக கூறினார்.இந்த மாற்றத்தால் தனக்கு பல வசதிகள் கிடைப்பதாகவும் பல நண்பிகள் இலகுவாக கிடைக்க கூடியதாக இருக்கிறதுஎன்று கூறினார்.
எப்படி இருப்பினும் தாய்நாட்டை மறக்க, மறுக்க,முடியுமா மயூரா???
இந்த பதிவு பல நண்பர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவே எழுதப்படுகிறது.எவ்வாறு எனின்,
எமது jhc2005 மின்னஞ்சல் வரவுப்பெட்டியானது தினமும் பல நூற்றுக்கணக்கான
மின்னஞ்சல்களினால் நிரம்புகிறது.அவற்றுள் பெரும்பாலானவை ”இந்தியா போவதாக கூறிவிட்டு
வெள்ளைக்கார நாடு சென்ற அந்த நம்பிக்கை ------ யார்?” என்பதாகும் எனவே நாங்கள்
நண்பர்களை திருப்தி படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இவரை பற்றி சுருங்கக் கூறின் இவர் ஒரு அண்ட ஆகாச மகா வெடிப்புழுகர்.
இவர் கூறுவதில் 20% மாத்திரமே உண்மை என்பது அனுபவப்பட்டவர்கள் கண்ட உண்மை.
இவர் யார் என ஊகிக்க முடிந்தால் குறிப்பிடவும்.
(தொடரும்...)
நண்பன் பிரசாந்தன் இன்று லண்டனில்(16/08/2008)இல் தனது 22வது
பிறந்தநாளை கொண்டாடுகிறார் அவருக்கு எமது JHC2005 சார்பில் வாழ்த்துகள் மேலும் சகல வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ்வதற்குவேம்படி
பிள்ளையார் அருள் புரிவாராக {வழமைபோல நண்பர்களு
க்கு பார்ட்டி வைக்காமல் கொண்டாடுகிறார்.)
குறிப்பு:இவருக்கு வேம்படி விநாயகர் மீது அபார பக்தி
வானர வர்க்கங்களிற்கு மத்தியில் நிற்கு
ம் நண்பர் ஜெயந்தன்.இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள் அங்கு ஒரு மோதிரம் தெரியும்.இது சட்ட பூர்வமானதா அல்லது சட்ட பூர்வமற்றதா என எமக்கு இதுவரை தெரியவில்லை.தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்.இவர் பெண் (- -) நண்பர்களுடன்??? மட்டும் பழகுவ
தால் எமக்கு விபரங்கள் கிடைப்பதில் சற்று தாமதம்.

(
இவரது கைவிரலை சற்று உற்றுப்பாருங்கள்)

பிந்திகிடைத்த புகைப்படம்

பெயர்இல்லாமல் கமெண்ட்ஸ் போடும் நண்பருக்கு...................
மே.அமலன் 
யாழ்,சன்னதி,தொண்டமண் ஆற்றில் குளித்து விட்டு நிக்கும் மே.அமலன் என்பவர் இப்பொலுது ஒரு உருப்படியான விசயத்த செய்யிராரம் யாழ்ப்பானத்தில் இருக்கும் போது இவர் all rounder நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியும் இவருடய படங்கள் மிகத் தெளிவாக சில தினங்களில்... மேலதிக செய்திகளும் விரைவில்.....


இவரிற்கு தான் ஒரு நடிகர் ஆக வேண்டும் என்ற நினைப்பு உருவானது.இந்நிலையில் இவர் எமது நண்பர் நடிகர் வினோஜ்யுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயன்றும்
அது பலன் அற்றுப் போகவே தனது மனத்திருப்திக்காக தனது புகைப்படத்தில் இருந்து
தலையை வேறாக்கி பிரபல தென் இந்திய கதாநாயகர்களின் படத்தில் தனது தலையை கணினி
மூலம் பொருத்தி (Photoshop) அதனை அச்சுப்பிரதி எடுத்து தனது அறையில்ஒட்டியிருப்பது மட்டுமின்றி
”ஃfacebook” நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளார்.இவரின் இவ் மன நோய்க்கான காரணம் என்ன?
இவற்றை விட விசேட செய்தி என்னவெனில்......
இவரிற்கு ”Photoshop” எனும் மென் பொருளை கையால்வதில் பரீட்சையம் குறைவு.
இதன் காரணமாக இவ்வாறான தலை வெட்டி மாற்றும் சித்து விளையாட்டுகளைதனது நண்பர் ஒருவர்
மூலம் நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.இவரின் இவ்வாறான மட்டமான பல்வேறுபட்ட
நிகழ்வுகள் தொடர்ந்தும் வர இருப்பதால் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்...

+
மலேசியாவிலிருந்து விடுமுறையில் இலங்கை வந்து வெள்ளவத்தையில் ரஜீவன் தலைமையில் கலக்கும் தீனா........
யாழ்ப்பாணத்தில் தொலைத்த தனது உடைமையை தேடுகிறாராம். வெள்ளவத்தை நண்பர்களே உங்களால் முடிந்தால் விடுமுறை முடிவதற்குள் கண்டுபிடிக்க உதவுங்கள்.
எங்கட நண்பர் ஒருவர் லண்டனில கலக்கிறாராம்? எங்கட லண்டன் செய்தியாளர் ஒருவர் புகைப்படத்தோட எமக்கு அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில ஒரு கூட்டமாகச்சுற்றின இவர் இலண்டனிலும் இவரது வட்டங்களுடன் திரிந்த இவர் இதில் மட்டும் எப்படி தனியாக...?கறுத்தக்கண்ணாடியுடன் தனக்கே கைவந்த தொழிலில் இறங்கிவிட்டார் என்று கேள்வி...? இதைவிட லண்டனில் பல கோணங்களிலெடுத்த புகைப்படங்களும் மேலதிக செய்திகளும் விரைவில்.....
தனது படிப்பு விசயமாக கிட்டடியில கோகுலவாசன் என்பவர் ஒருத்தருக்கும் சொல்லாமல் இந்தியாவிக்கு போயிட்டு வந்தவர். அங்க ”சன்மியூசிக்கில” போய் ”சன்மியூசிக்” நேயர்களோட கதைத்துள்ளார். இப்ப என்னன்டா இவருக்கு பக்கத்தில நிக்கிற பிள்ளைக்கு இவர் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு அன்பு தொல்லை கொடுப்பதாக கொழும்பில ஒரு கதை அடிபடுது???
இந்தியாவில போய் படிக்கப்போறன் எண்டு கதைவிட்டு சிலபேரை ஏமாத்திட்டு வெள்ளைக்காரன்ர(USA) நாட்டுக்கு போனவரின்ட கதை விரைவில்..........
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் கலக்கின நண்பன் சாந்தன் இன்று
லண்டனில் சைக்கிளில மட்டுமல்ல குதிரையிலும் கலக்கிறாரெண்டு தற்போது தகவல் கிடைத்துள்ளது.லண்டன் வாழ் நண்பர்களே தயை கூர்ந்து மேலதிக செய்திகளை உடன் வழங்கவும்.உங்கள் சேவையை நாடும்
jhc2005
பிரசாந்தன் என்பவருங்கோ யாழ்ப்பாணத்தில முந்தி சைக்கிள் ஒன்டில தொங்கி தொங்கி திரிஞ்சவர். இப்ப என்னன்டா குதிரையெல்லோ ஓடுறார். குதிரை ஓடுரண்டா நீங்க நினைக்கிற மாதிரி தப்பான விசயமில்ல. அவர் பொய்க் குதிரையில (Merry-go-round) ஏறி சுத்துராருங்கோ???
இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாராம்.....

அத்தோட இன்னொருத்தரும் குதிரை ஓடுறதா கேள்வி!!!
அது விரைவில்.....