*.*.*.*.*.*.*.மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரையும்.*.*.*.*.*.*.*.

Tuesday, June 24, 2008

searching

hi guys,
let me know how r u doing?
i need Krisanth (13 C) contact details, If anyone knows please let me know.
thank you guys.
your loving friend,
Jay.

Sunday, June 22, 2008

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில்

யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் கலக்கின நண்பன் சாந்தன் இன்று
லண்டனில் சைக்கிளில மட்டுமல்ல குதிரையிலும் கலக்கிறாரெண்டு தற்போது தகவல் கிடைத்துள்ளது.லண்டன் வாழ் நண்பர்களே தயை கூர்ந்து மேலதிக செய்திகளை உடன் வழங்கவும்.உங்கள் சேவையை நாடும் jhc2005

Friday, June 20, 2008

குதிரை ஓடுகிற பிரசாந்தன்

பிரசாந்தன் என்பவருங்கோ யாழ்ப்பாணத்தில முந்தி சைக்கிள் ஒன்டில தொங்கி தொங்கி திரிஞ்சவர். இப்ப என்னன்டா குதிரையெல்லோ ஓடுறார். குதிரை ஓடுரண்டா நீங்க நினைக்கிற மாதிரி தப்பான விசயமில்ல. அவர் பொய்க் குதிரையில (Merry-go-round) ஏறி சுத்துராருங்கோ???
இன்னமும் சின்னப்பிள்ளையாகவே இருக்கிறாராம்.....


அத்தோட இன்னொருத்தரும் குதிரை ஓடுறதா கேள்வி!!!
அது விரைவில்.....

Thursday, June 19, 2008

நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர்

வணக்கம் அன்பு நண்பர்களே, நீண்ட ஒரு இடைவெளிக்குப்பின்னர் மீண்டுமொரு சந்திப்பு. மனதிற்கு ஆறுதலாக என் நண்பர்களின் சந்திப்பு. நான் தங்கள் குழுமத்தினருடன் பழகியமை மிகவும் குறைவாக இருப்பினும், தங்கள் 2005 வருட உயர் கல்விக்காலத்தில் தங்களுடன் கற்றவன் என்னும் வகையிலேயே இதில் இணைந்திருக்கின்றேன். நன்றி இவ்வாறு ஒரு சந்திப்பு. மறக்காத பள்ளியும் அதிலே மறக்க நினைக்காத மைதான மரத்தடி உரைகளும், கிண்டல்களும், கேலிகளும் என்றும் மீண்டும் என்னும் ஏக்கத்துடன்; அலைபாயும் மனத்துடன் அந்நிய நாட்டிலே அநாதையாக.... எதை எப்படிப் பேசினாலும், மனதிலே வைக்காத நம் நண்பன் என்னும் பாசம் மீண்டும் கிள்ளி இழுக்கின்றது. வருவோம் சந்திப்போம், நாள் வெகு தொலைவிலில்லை; காணும் நாளில் கைகொட்டிச் சிரிப்போம் இதைப்பற்றி... தொடரட்டும் தங்களின் நண்பர் வட்டாரம். என் நினைவுகளை பதிவேன் சிறிது கால அவக்காசந் தேவை. மன்னிக்கவும். மறந்தே போய்விட்டேன் மலேசியாவில் நானுள்ளேன். நீங்கள் சிலரிருக்கும் இடம் மட்டும் எனக்கு தெரிந்தாலும் காலம் நம்மை நம்மிடத்தில் சேர்க்கும் காத்திருப்போம் இன்னமும் சிறிது காலம் தான். இலங்கையிலுள்ள நண்பர்களே தங்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பாதுகாப்பாக இருங்கள். வருவேன் அடுத்தவருட இறுதிக்குள் முடிந்தால் சந்திக்கின்றேன். கூடப்படித்த பலரை இழந்துவிட்டோம் இனியும் இழக்க விருப்பமில்லை. தங்கள் ஆருயிர் நண்பர்களின் இறுதி மூச்சுவரை என்னிடம் உள்ளத்திலே பதிந்துள்ளது. இரைமீட்போம் ஒருநாள்.

நன்றி

தங்கள் நண்பர்களில் ஒருவன்,
பா.கோகிலநாத்.

Saturday, June 14, 2008

அன்பு நண்பர்களே

என்ன??????
வணக்கம் நண்பர்களா நானும் வந்துட்டன் என்ன??????
உங்கள்
மயுரன்

Thursday, June 12, 2008

மலேசியாவில் கலக்கிறாரு

யாழ் மண்ணின் தீக்கோழி என செல்லமாக அழைக்கப்படும் தீனதக் ஷன் தனது 21 வருட பூர்த்தியை 11.06.2008 அன்று மலேசியாவில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார்.வாருங்கோ நாங்களும் போய் மொய் எழுதிட்டு வருவோம்.அத்தோட எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.மலேசியா வாழ் நண்பர்களே மறந்திடாம இரவு விருந்துபசாரத்துல கலந்துகொள்ளுங்கோ!
நண்பரோட புகைப்படம் வரத்தாமதமாகியதால பிரசுரிக்காததற்கு மனம் வருந்துகிறோம்.வந்தவுடன் பிரசுரிக்கப்படும்.உங்களிடம் இருந்தால் தந்துதவுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள்


நண்பன் தீனதக்ஷன் தனது 22 பிறந்தநாளை மலேசியாவில் 11.06.2008 வெகுவிமரிசையாகக்கொண்டாடினார் . அவருக்கு எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம்.அத்துடன் தனது convocation ஜ{next day} முடித்துள்ளார் அவருக்கு எங்கட வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம் . மலேசியாவில் girl friend உடன் கலக்கிறார் எண்டு ஒரு வதந்தி.............


your friend shanthan